Poologathaare yaavarum
1. பூலோகத்தாரே யாவரும்
கர்த்தாவில் களிகூருங்கள் ,
ஆனந்தத்தோடே ஸ்தோத்திரம்
செலுத்தி , பாட வாருங்கள்.
2. பராபரன் மெய்த் தெய்வமே;
நாம் அல்ல, அவர் சிஷ்டித்தார்;
நாம் ஜனம், அவர் ராஜனே;
நாம் மந்தை, அவர் மேய்ப்பனார்.
3. கெம்பீரித்தவர் வாசலை
கடந்து உள்ளே செல்லுங்கள்;
சிறந்த அவர் நாமத்தை
கொண்டாடி, துதிசெய்யுங்கள் .
4. கர்த்தர் தயாளர் , இரக்கம்
அவர்க்கு என்றும் உள்ளதே;
அவர் அநாதி சத்தியம்
மாறாமல் என்றும் நிற்குமே.
5. விண் மண்ணில் ஆட்சி செய்கிற
திரியேக தெய்வமாகிய
பிதா, குமாரன் , ஆவிக்கும்
சதா ஸ்துதி உண்டாகவும் . ஆமேன் .
No comments:
Post a Comment