Wednesday, 13 May 2015

பா:5 எல்லாம் சிஷ்டித்த நமது

Ellam sishtitha namadhu

1. எல்லாம் சிஷ்டித்த நமது 
தயாபர பிதாவுக்கு 
அநந்த காலமாக 
அல்லேலுயா! மகத்துவம் ,
பலம், புகழ்ச்சி, தோத்திரம் 
உண்டாய் இருப்பதாக ;
பார்ப்பார், காப்பார்
வல்லமையும் கிருபையும் 
அன்பும் எங்கும் 
அவர் செய்கையால் விளங்கும்.

2. மண் நீசருக்கு மீட்பரும் 
கர்த்தாவுமாம் சுதனுக்கும் 
ரட்சிப்பின் அன்புக்காக ,
அல்லேலுயா ! புகழ்ச்சியும் 
அநந்த ராஜரீகமும் 
உண்டாய் இருப்பதாக !
பாவம், சாபம் 
எந்தத் தீங்கும் அதால் நீங்கும்,
என்றென்றைக்கும் 
பாக்கியம் எல்லாம் கிடைக்கும்.

3. மனந்திருப்பி எங்களை 
பர்த்தாவாம் இயேசுவண்டையே 
அழைத்து, நேர்த்தியாக 
சிங்காரிக்கும் தேவாவிக்கும் ,
அல்லேலுயா ! புகழ்ச்சியும் 
வணக்கமும் உண்டாக;
வான, ஞான 
வாழ்வினாலும் செல்வத்தாலும் 
தேற்றிவாறார் ,
அதின்முன் ருசியைத் தாறார் .

4. எல்லா சிஷ்டிகளாலேயும் 
பிதா குமரன் ஆவிக்கும் 
அநந்த காலமாக ,
அல்லேலுயா ! மகத்துவம் ,
பலம், புகழ்ச்சி, தோத்திரம் 
உண்டாய் இருப்பதாக ;
ஆமேன், ஆமேன் !
நீர் அநந்தம் , ஆதியந்தம் ,
பரிசுத்தம் ,
பரிசுத்தம், பரிசுத்தம் . ஆமேன் .

No comments:

Post a Comment