karthaave ippo ummai thozhuthom
1. கர்த்தாவே இப்போ உம்மை தொழுதோம் ,
ஓர்மித்தெழுந்து கீதம் பாடுவோம்;
வீடேகுமுன் உம பாதம் பணிந்தே
உம் ஆசீர்வாதம் பெற்றுச் செல்வோமே .
2. உம் சமாதானம் தந்து அனுப்பும் ,
உம் நாளை முடிப்போமே உம்மோடும் ;
பாதம் பணிந்த எம்மைக் காத்திடும் ,
எப்பாவம் வெட்கம் அணுகாமலும்.
3. உம் சமாதானம் இந்த ராவிலும் ;
இருளை நீக்கி ஒளி தந்திடும் ;
பகலோராவோ உமக்கொன்றாமே
எச்சேதமின்றி எம்மைக் காருமே .
4. உம் சமாதானம் ஜீவ நாள் எல்லாம் ;
நீர்தொல்லை துன்பில் புகல் இன்பமாம் ;
பூலோகத் தொல்லை ஓய அழைப்பீர் ,
பேரின்ப வாழ்வை அன்பாய் ஈகுவீர். ஆமேன் .
No comments:
Post a Comment