Ummai thudhikkirom
1. உம்மைத் துதிக்கிறோம், யாவுக்கும்
வல்ல பிதாவே ;
உம்மைப் பணிகிறோம், ஸ்வாமி,
ராஜாதி ராஜாவே ;
உமது மா
மகிமைக்காக, கர்த்தா ,
ஸ்தோத்திரம் சொல்லுகிறோமே.
2. கிறிஸ்துவே இறங்கும்; சுதனே ,
கடன் செலுத்தி ,
லோகத்தின் பாவத்தை நீக்கிடும்
தெய்வாட்டுக்குட்டி ,
எங்கள் மனு
கேளும்; பிதாவினது
ஆசனத் தோழா, இரங்கும் .
3. நித்ய பிதாவின் மகிமையில்
இயேசுவே, நீரே
பரிசுத்தாவியோடேகமாய்
ஆளுகிறீரே .
ஏகமாய் நீர்
அர்ச்சிக்கப்படுகிறீர்
உன்னத கர்த்தரே ஆமேன் .
No comments:
Post a Comment