Wednesday, 13 May 2015

பா:19 எவ்வண்ணமாக கர்த்தரே ( Wherewith O God shall I draw near )

Yevvannamaaga Karthare

1. எவ்வண்ணமாக, கர்த்தரே,
உம்மை வணங்குவேன் ?
தெய்வீக ஈவைப் பெறவே 
ஈடென்ன தருவேன்?

2. அநேக காணிக்கைகளால் 
உம கோபம் மாறுமோ ?
நான் புண்ய க்ரியை செய்வதால் 
கடாட்சம் வைப்பீரோ?

3. பலியின் ரத்தம் வெள்ளமாய் 
பாய்ந்தாலும், பாவத்தை 
நிவிர்த்தி செய்து சுத்தமாய் 
ரட்சிக்கமாட்டாதே .

4. நான் குற்றவாளி, ஆகையால் 
என் பேரில் கோபமே 
நிலைத்திருந்து சாபத்தால் 
அழிதல் நியாயமே.

5. ஆனால் என் பாவம் சுமந்து 
ரட்சகர் மரித்தார்;
சாபத்தால் தலை குனிந்து 
தம் ஆவியை விட்டார்.

6. இப்போதும் பரலோகத்தில் 
வேண்டுதல் செய்கிறார் ;
உம திவ்ய சந்நிதானத்தில் 
என்னை நினைக்கிறார் .

7. இவ்வண்ணமாக, கர்த்தரே 
உம்மை வணங்குவேன் 
என் நீதி இயேசுகிறிஸ்துவே ,
அவரைப் பற்றினேன் .  ஆமேன் .

No comments:

Post a Comment