Wednesday, 13 May 2015

பா:16 ஆ கர்த்தாவே தாழ்மையாக

Aa Karthaave thaazhmaiyaga

1. ஆ கர்த்தாவே, தாழ்மையாக 
திருப்பாதத்தண்டையே 
தெண்டனிட ஆவலாக 
வந்தேன் நல்ல இயேசுவே ;
உம்மைத் தேடி 
தரிசிக்கவே வந்தேன் .

2. வல்ல கர்த்தாவினுடைய 
தூய ஆட்டுக்குட்டியே 
நீரே என்றும் என்னுடைய 
ஞான மணவாளனே ;
உம்மைத் தேடி 
தரிசிக்கவே வந்தேன்.

3. என் பிரார்த்தனையைக் கேளும் 
அத்தியந்த பணிவாய் ;
கெஞ்சும் என்னை ஏற்றுக்கொள்ளும் 
உம்முடைய பிள்ளையாய் ;
உம்மைத் தேடி 
தரிசிக்கவே வந்தேன்.   ஆமேன் .

No comments:

Post a Comment